/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரோ பீச்சில் ஆபத்தான குளியல் தடுக்க நடவடிக்கை தேவை
/
ஆரோ பீச்சில் ஆபத்தான குளியல் தடுக்க நடவடிக்கை தேவை
ஆரோ பீச்சில் ஆபத்தான குளியல் தடுக்க நடவடிக்கை தேவை
ஆரோ பீச்சில் ஆபத்தான குளியல் தடுக்க நடவடிக்கை தேவை
ADDED : ஆக 17, 2025 03:43 AM

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அடுத்த ஆரோ பீச்சில் சுற்றுலா பயணிகள் ஆபத்தான நிலையில் குளித்து வருவதை தடுக்க அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும்.
புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் இ.சி.ஆரில், கோட்டக்குப்பம் அடுத்த ஆரோவில் பீச், பொம்மையார்பாளையம் பீச் பகுதிகளில் தினமும் 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயனிகள் வருகின்றனர். வார விடுமுறை தினமான சனி, ஞயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்படும்.
இதே போன்று, 3 நாட்கள் விடுமுறையில் கடந்த இரு தினங்களாக ஆரோ பீச்சில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. நேற்று வெயிலையும் பொருட்படுத்தாமல் பொம்மையார்பாளையம், ஆரோ பீச்சில் உள்ளூர் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடலில் ஆபத்தான குளியலில் ஈடுபட்டனர்.
ஒரு பக்கம் பாறைகளில் சிலர் அமர்ந்து மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஒரு சில சமயங்களில் மட்டுமே போலீசார் அப்பகுதிக்கு சென்று கடலில் குளிப்போரை விரட்டுகின்றனர். மற்ற நேரங்களில் உல்லாச குளியல் தொடர்கிறது.
நேற்று புதுச்சேரி அடுத்த சின்ன வீராம்பட்டினம் பகுதியில் கடலில் குளித்த பெங்களூருவை சேர்ந்த 3 சுற்றுலா பயணிகள் இறந்தனர்.
இதுபோன்று உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க ஆரோ பீச், பொம்மையார்பாளையம் பகுதிக்கு வந்து குளிப்பதற்கு வருவாய், காவல்துறை அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும்.