/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காட்டுப் பன்றிகள் கட்டுப்படுத்த செயல் விளக்கம்
/
காட்டுப் பன்றிகள் கட்டுப்படுத்த செயல் விளக்கம்
ADDED : ஜன 04, 2025 04:54 AM
பாகூர்: கரையாம்புத்துார் கிராமத்தில், விவசாய பயிர்களில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவது குறித்து செயல் விளக்க முகாம் நடந்தது.
புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் கீழ் செயல்படும் வேளாண் அறிவியல் கல்லுாரியின், இளநிலை மாணவர்கள் ஊரக வேளாண் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கரையாம்புத்துார் கிராமத்தில், உழவர் உதவியகம் ஆத்மா திட்டத்தின் கீழ், விவசாய பயிர்களில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவது பற்றி செயல் விளக்க முகாம் நடந்தது.
முகாமை, வேளாண் அலுவலர் புவனேஸ்வரி துவக்கி வைத்தார்.
களப்பணியாளர் பக்தவச்செல்வம், மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவர்கள், காட்டுப் பன்றியை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

