மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 37 மனுக்கள் மீது நடவடிக்கை
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 37 மனுக்கள் மீது நடவடிக்கை
ADDED : மே 24, 2026 02:55 AM

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 37 புகார் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.
புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் ஒவ்வொரு சனிக்கிழமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
நேற்று காலாப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மக்கள் மன்றத்தில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பங்கேற்று பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தார்.
அதே போன்று, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், சைபர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ராகவ், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களின் சீனியர் எஸ்.பி., திவ்யா, எஸ்.பி.,க்கள் ரச்சனா சிங், பக்தவச்சலம் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், காரைக்கால் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., நித்தியா, அரியாங்குப்பத்தில் எஸ்.பி., கோதண்டராமன், மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., கதிரவன் கலந்து கொண்டு புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
போலீஸ் ஸ்டேஷன்களில் நடந்த மக்கள் மன்றத்தில் 38 பெண்கள் உட்பட 191 பேர் பங்கேற்றனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 58 புகார் மனுக்களில் 37 மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டது.
