தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆயுஷ் மருந்து கடைகள் திறக்க நடவடிக்கை: இயக்குனர் ஸ்ரீதரன் தகவல்

ஆயுஷ் மருந்து கடைகள் திறக்க நடவடிக்கை: இயக்குனர் ஸ்ரீதரன் தகவல்

ஆயுஷ் மருந்து கடைகள் திறக்க நடவடிக்கை: இயக்குனர் ஸ்ரீதரன் தகவல்


ADDED : அக் 08, 2024 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 03:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆயுஷ் மருந்துகளுக்கான சிறப்பு மருந்து கடைகள் புதுச்சேரியில் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக, புதுச்சேரி ஆயுஷ் இயக்குனரக டாக்டர்கள் தெரிவித்ததனர்.

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் 100 நாள் சாதனைகள் குறித்து புதுச்சேரி ஆயுஷ் இயக்குனரகத்தின் இயக்குனர் ஸ்ரீதரன், ேஹாமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மைய பொறுப்பு அதிகாரி பிரபாத் திவாரி கூறியதாவது:

ஆயுஷ் மருந்துகளை எளிதாக பெற ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய அமைச்சர், ஒவ்வொரு தாலுகா அளவில் சிறப்பு மருந்து கடைகளை திறக்க உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளார். புதுச்சேரியில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு மூலிகை, பாரம்பரிய மருந்துகள் கிடைப்பது எளிதாகும். நகர்புற, கிராமப்புறங்களில் பொது சுகாதாரம் மேம்பாடு அடையும்.

புதுச்சேரியில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு டெங்கு காய்ச்சலுக்கான ேஹாமியோபதி தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டது. ரத்த சோகை தடுப்பிற்கும் ேஹாமியோபதி மருந்து விநியோகத்திற்காக சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த 100 நாட்களில் புதுச்சேரியில் ேஹாமியோபதி சிகிச்சை மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். இவர்களில் 55 சதவீதத்திற்கும் அதிகமான பெண் நோயகாளிகள் ேஹாமியோபதி முறையில் பயன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன், ஆயுஷ் மருத்துவனை மேலாண்மை தகவல் அமைப்பு பதிவு நடந்து வருகிறது. ஆயுஷ்மான் பாரத் ெஹல்த் அக்கவுண்ட் எண்ணுடன் இணைக்கப்பட்டு வருகிறது.

வைட்டமின்-டி குறைப் பாட்டின் பரவலைமதிப்பிடுவதற்கான பொது சுகாதார திட்டம், ேஹாமியோபதி மருத்துவ சிகிச்சை துவங்கப்பட உள்ளது. துாய்மை பிரசாரம் பள்ளி, கடற்கரை பகுதி, பூங்காவில் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us