/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி வைத்துள்ள பேனரை அகற்ற நடவடிக்கை: கலெக்டர்
/
அனுமதியின்றி வைத்துள்ள பேனரை அகற்ற நடவடிக்கை: கலெக்டர்
அனுமதியின்றி வைத்துள்ள பேனரை அகற்ற நடவடிக்கை: கலெக்டர்
அனுமதியின்றி வைத்துள்ள பேனரை அகற்ற நடவடிக்கை: கலெக்டர்
ADDED : ஜன 30, 2025 06:37 AM
புதுச்சேரி: அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர், கட்அவுட்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக, கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில், சாலையோரங்களில், அனுமதியின்றி பொது இடங்களில், வைக்கப்பட்டுள்ள பேனர்கள், மற்றும் கொடி கம்பங்கள் அகற்றுவது தொடர்பாக, கடந்த 21ம் தேதி, ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், புதுச்சேரி நகராட்சி பகுதிகளில், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், பேனர்கள், கட்அவுட், அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குறிப்பிட்டுள்ள நாட்களில், அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறது.
எனவே, மாவட்ட நிர்வாகத்திற்கு, பொதுமக்கள், வியாபாரிகள் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும். மேலும், கட் அவுட், பேனர்கள், கொடிக்கம்பங்கள் வைத்துள்ளவர்கள் தானாக முன் வந்து, அகற்றி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

