/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் மீனவர் படகுகளை மீட்க நடவடிக்கை: கவர்னர் உறுதி
/
காரைக்கால் மீனவர் படகுகளை மீட்க நடவடிக்கை: கவர்னர் உறுதி
காரைக்கால் மீனவர் படகுகளை மீட்க நடவடிக்கை: கவர்னர் உறுதி
காரைக்கால் மீனவர் படகுகளை மீட்க நடவடிக்கை: கவர்னர் உறுதி
ADDED : ஜன 22, 2024 06:06 AM

புதுச்சேரி : இலங்கை கடற்படை பறிமுதல் செய்த காரைக்கால் மீனவர்கள் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் தமிழிசை உறுதி அளித்தார்.மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மாநிலங்களின் உதய நாள் கொண்டாட்டம், கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். புதுச்சேரி பல்கலைக்கழகம், தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஜிப்மர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அம்மாநிலங்களின் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை கவர்னர் சால்வை அணிவித்து பாராட்டினார்.
தொடர்ந்து அந்தந்த மாநில பண்பாடு, வரலாற்றை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.பின், கவர்னர் தமிழிசை பேசியதாவது;
மணிப்பூர் மாநிலத்தில் 40 மொழிகள் பேசப்படுகிறது. ஒரே மாநிலத்தில் 40 வெவ்வேறு மொழிகள் பேசுவது வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பதை காட்டுகிறது.மேகாலயா மாநில பெயர் தமிழில் மேகங்களின் ஆலயம் என பொருள்.
திரிபுரா மாநில பொருள், சிவன், பிரம்மன், விஷ்ணு மூன்று கடவுள்களும் ஒருங்கிணைந்த இடம் திரிபுரம் என்று அழைக்கப்படும். அப்படி திரிபுரா மாநிலம் ஆன்மிகத்தின் இருப்பிடமாக திகழ்கிறது. இந்த மகிழ்ச்சி ஒரு நாள் மட்டும் இன்றி, வருடத்தின் அனைத்து நாட்களிலும் தொடர வேண்டும். உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் கவர்னர் மாளிகை உதவ தயாராக இருக்கும்.
இவ்வாறு கவர்னர் பேசினார்.
மீனவர்கள் சந்திப்பு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சமீபத்தில் விடுதலையான காரைக்கால் மீனவர்கள், கவர்னர் தமிழிசையை நேற்று சந்தித்து, நன்றி தெரிவித்தனர். இலங்கை அரசு சிறைபிடித்துள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். கவர்னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பாடல் வெளியீடு:அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, ஓசூர் பள்ளி மாணவி மஹண்யா, பகவான் ராமர் மீது பாடிய பக்தி பாடல்களை கவர்னர் தமிழிசை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயலர் ராஜிவ் வர்மா உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாடல் பாடிய மாணவியை கவர்னர் பாராட்டினார்.