தொழிலபதிபரிடம் பணம் பறிப்பு வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற நடவடிக்கை
தொழிலபதிபரிடம் பணம் பறிப்பு வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற நடவடிக்கை
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:58 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் தொழிலதிபரிடம் பணம் மோசடிசெய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ். இவரை தொடர்பு கொண்ட சென்னையை சேர்ந்த முகமது ரபீக் ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தால், 8 சதவீத கமிஷன் மூன்று மணி நேரத்தில், இரட்டிப்பாக ஆக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.
இதனை நம்பிய வெங்கடேஷ் தனது நண்பர் மகேஷூடன் நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் ரூ.2 கோடி பணம் புரட்டியுள்ளார். பின், கடந்த 29ம் தேதி டி.ஆர். நகரில் வைத்து, பார்த்தசாரதி, முகமது ரபீக்கிடம் ரூ. 2 கோடியை கொடுத்தனர். பின், மூன்று மணி நேரம் கடந்தும் பணம் இரட்டிபாகி திரும்பாததால், வெங்கடேஷ் பணம் வரவில்லை என கேட்டுள்ளார். இதற்கிடையில், அந்த கும்பலில் இருந்தவர்கள், பணத்துடன் தப்பிக்க பார்த்தனர்.
அதில், மூன்று கட்டப்பைகளில் இரண்டு பைகளை வெங்கடேஷ் எடுத்துக் கொண்டதுடன், ஒரு பையை அந்த கும்பலில் இருந்தவர் எடுத்துக் கொண்டு தப்பியோடி விட்டார். பணத்தை சரிபார்த்த போது, ரூ.88 லட்சம் பணம் எடுத்துச் செல்லப்பட்டது. தெரிந்தது. இதையடுத்து வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து 8 பேரை கைது செய்து ரூ.39 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, ரூ.49 லட்சத்துடன் தப்பியோடிவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் லட்சக்கணக்கில் பணம் சம்பந்தப்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
