/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி பேனர் வைத்தால் நடவடிக்கை
/
அனுமதியின்றி பேனர் வைத்தால் நடவடிக்கை
ADDED : ஆக 10, 2025 08:35 AM
புதுச்சேரி : அரியாங்குப்பத்தில் சாலைகளில் போக்குவரத்து இடையூறாக பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையர் ரமேஷ் எச்சரித்துள்ளார்.
அரியாங்குப்பம் ஆணையர் ரமேஷ் செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் அனுமதியின்றி சாலையில் பேனர்கள் வைப்பதால் போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்துகள் நடக்கிறது.
பேனர் வைக்க தடை சட்டம் உள்ள நிலையில், அதை மீறி அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து வருகின்றனர்.
அரியாங்குப்பம் பகுதியில் சாலைகளில் பேனர்கள் வைப்பதால் விபத்துகள் நடக்கிறது. வருங்காலங்களில் அனுமதியின்றி சாலைகளில் பேனர்கள் வைத்தால் போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பேனர் வைப்பவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.