தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சனிஸ்வரபகவான் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தரிசனம்

 சனிஸ்வரபகவான் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தரிசனம்

 சனிஸ்வரபகவான் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தரிசனம்


ADDED : மார் 09, 2026 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 04:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வரபகவான் கோவிலில் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம் செய்தார்.

காரைக்கால் திருநள்ளாறு உலக பிரசித்திபெற்ற தர்பார்னேஸ்வரர் கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக சனிபகவான் தனிசன்னதியில் அருள்பலித்து வருகிறார்.இக்கோவிலில் கடந்த 6ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் திரைப்பட பிரபலங்கள் என பலர் சனிஸ்வபகவானை தரிசனம் செய்து வருகின்றனர்.

நேற்று திருநள்ளாறு கோவிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வந்திருந்தார். அவரை கோவில் நிர்வாகம் சார்பில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை சட்டநாத தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் தார்பாரண்யோஸ்வர்கள்,விநாயகர்,முருகன்,அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்த அவர் சனிஸ்வரபகவானை சிறப்பு தரிசனம் செய்தார்.பின்னர் தங்க காக்கை வாகனத்தில் அருள்பலிக்கு சனிஸ்வபகவானை தரிசனம் செய்தார்.

சிவகார்த்திகேயயை அவரது ரசிகர்கள் பலர் திரண்டு புகைப்படம் எடுத்துகொண்டனர். உடன் சப் கலெக்டர் பக்கிரிசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us