/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டாக் ஒதுக்கீட்டிற்கு கூடுதல் விளையாட்டுகள் சேர்ப்பு: அப்டேட் பட்டியலுடன் விரைவில் அரசாணை
/
சென்டாக் ஒதுக்கீட்டிற்கு கூடுதல் விளையாட்டுகள் சேர்ப்பு: அப்டேட் பட்டியலுடன் விரைவில் அரசாணை
சென்டாக் ஒதுக்கீட்டிற்கு கூடுதல் விளையாட்டுகள் சேர்ப்பு: அப்டேட் பட்டியலுடன் விரைவில் அரசாணை
சென்டாக் ஒதுக்கீட்டிற்கு கூடுதல் விளையாட்டுகள் சேர்ப்பு: அப்டேட் பட்டியலுடன் விரைவில் அரசாணை
ADDED : மே 14, 2024 05:04 AM

புதுச்சேரி: சென்டாக் இட ஒதுக்கீட்டிற்கான விளையாட்டுகளின் பட்டியலை காலத்துகேற்ப அப்டேட் செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்து பணிகளை வேகப்படுத்தி வருகின்றது.
புதுச்சேரியில் சென்டாக் உயர் கல்வி மாணவர் சேர்க்கையின்போது, பொது 50,ஓ.பி.சி., 11,முஸ்லீம் 2, எம்.பி.சி., 18 , மீனவர் 2, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர 0.5, எஸ்.சி., 16, அட்டவணை பழங்குடியினர் 0.5 என்ற இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இது மட்டுமின்றி உள் ஒதுக்கீடும் கடைபிடிக்கப்படுகின்றது.
1 சதவீதம்
விடுதலை போராட்ட வீரர் வாரிசு 4, மாற்றுதிறனாளி 5, முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு மருத்துவ படிப்பில் 1 சதவீதம், இதர படிப்புகளில் 3 சதவீதம் வரை உள் ஒதுக்கீடு தரப்படுகின்றது.
இதுதவிர விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு 1 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் ஆண்டுதோறும் கணிசமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்காக புதுச்சேரியில் விளையாட கூடிய 40 வகையான விளையாட்டுகள் அடையாளம் காணப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
அப்டேட் பட்டியல்
காலத்துகேற்ப பல்வேறு புதிய விளையாட்டுகள் புதுச்சேரியில் புதிதாக நுழைந்துள்ள போதிலும், அப்டேட் செய்யப்படவில்லை. கடந்த 2018 ம் ஆண்டு அரசாணையில் இடம் பிடித்த விளையாட்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு கிடைத்து வருகின்றது. இதனால் புதிய விளையாட்டுகளையும் சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத் தப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில், மத்திய இளைஞர் நலம் விளையாட்டு அமைச்சகத்தினை பின்பற்றி காலத்துகேற்ப இட ஒதுக்கீடு அளிக்கப்படும் விளையாட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான கோப்பு தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
65 விளையாட்டுகள்
மத்திய இளைஞர் நலம் விளையாட்டு அமைச்சகத்தில் 65 விளையாட்டுகளுக்கு இட ஒதுக்கீட்டிற்காக அங்கீகரித்துள்ளது. கடைசியாக 64வது விளையாட்டாக டென்னிஸ்பால் கிரிக்கெட், 65 வது விளையாட்டாக யோகாசனத்தை அங்கீகரித்து சேர்த்து இருந்தது.
இந்த 65 விளையாட்டுகளும் புதுச்சேரியில் உயர் கல்வி சேர்க்கை இட ஒதுக்கீட்டிற்கு அங்கீரிக்கப்பட உள்ளன.
விரைவில் இட ஒதுக்கீட்டிற்காக புதிதாக அங்கீகரிக்கப்பட உள்ள விளையாட்டுகளின் பெயர் பட்டியல் அரசாணையாக வெளியிடப்பட உள்ளது.
தகவல் குறிப்பேடு
நீட் அல்லாத படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை ஏற்கனவே துவங்கி விட்டது, கடந்த 7ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பிக்க வரும் 22ம் தேதி இறுதி காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சென்டாக் தகவல் குறிப்பேட்டில் 40 விளையாட்டுகளின் மட் டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தந்த விளையாட்டுகள் புதிதாக அங்கீகரிக்கப்பட உள்ளன என்று விளையாட்டு துறையும், உயர் கல்வி துறையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருவதால் மாணவ மாணவிகள் குழப்பம் அடைத்துள்ளனர்.
எனவே அங்கீகரிகக்கப்பட உள்ள புதிய விளையாட்டுகளின் பட்டியலை விரைவாக வெளியிட்டால், அதற்கு ஏற்ப அம்மாணவர்கள் சான்றிதழ்கள் ரெடி செய்து விண்ணப்பிக்க வசதியாக இருக்கும்.

