/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு
/
பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு
ADDED : மார் 05, 2024 05:04 AM
புதுச்சேரி: ஏழு பி.சி.எஸ்.,அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித் துறை இயக்குனர் பிரியதர்ஷினிக்கு விளையாட்டு இளைஞர் நலம் இயக்குனர் பொறுப்பும், அறிவியில் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ரெட்டிக்கு முப்படை நலத் துறையும் கூடுதலாக கவனிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபை செயலர், சபாநாயகரின் தனி செயலர் ஆகிய பதவிகளை வகிக்கும் தயாளனுக்கு மாவட்ட பதிவாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
ஐ.டி., துறை இயக்குனர் சிவராஜ் மீனாவுக்கு, புதுச்சேரி வீட்டு வாரிய செயலர் பொறுப்பும், கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் கலியபெருமாளுக்கு பி.ஆர்.டி.சி., பொது மேலாளராக (நிர்வாகம்)பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் காரைக்கால் பேரிடர் மேலாண்மை துறை துணை கலெக்டர் வெங்கடகிருஷ்ணனுக்கு ஜெயபிரகாஷ் நாராயணன் நுாற்பாலை மேலாண் இயக்குனராகவும், மீன்வளத் துறை இயக்குனர் முகமது இஸ்மாயிலுக்கு பி.ஆர்.டி.சி., பொது மேலா ளராகவும் (இயக்குதல்) கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பினை கவர்னரின் உத்தரவின்படி நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.
காரணம் என்ன
முக்கிய பி.சி.எஸ்.,அதிகாரிகள் லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட்டுள் ளனர். இதன் காரணமாகவே அவர்களிடமிருந்த வழங்கமான துறை இயக்குனர் பொறுப்புகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டு, தேர்தல் பணியில் இல்லாத பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு பகிர்ந்தளிக் கப்பட்டுள்ளது.

