/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்வித்துறையில் கூடுதல் பொறுப்பு
/
கல்வித்துறையில் கூடுதல் பொறுப்பு
ADDED : ஏப் 02, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி கல்வித்துறையில் பெண் கல்வி துணை இயக்குனர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி ஜீவானந்தம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் துணை முதல்வர் ராமச்சந்திரன் கூடுதலாக பெண் கல்வி துணை இயக்குநர் பொறுப்பு வகிப்பார்.
அதே போல, மடுகரை ராமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் கிரேடு 1 தலைமை ஆசிரியராக பணியாற்றும் குலசேகரன், முதன்மை கல்வி அலுவராக (சி.இ.ஓ.) பொறுப்பை, கூடுதலாக வகிப்பார்.இதற்கான உத்தரவை, பள்ளி கல்வி இயக்குநர் பிரியதர்ஷினி பிறப்பித்துள்ளார்.