தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அலங்கார வண்டி அணிவகுப்பில் ஆதிதிராவிடர் நலத் துறை முதலிடம்

அலங்கார வண்டி அணிவகுப்பில் ஆதிதிராவிடர் நலத் துறை முதலிடம்

அலங்கார வண்டி அணிவகுப்பில் ஆதிதிராவிடர் நலத் துறை முதலிடம்


ADDED : ஜன 27, 2025 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2025 05:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : அலங்கார வண்டி அணி வகுப்பில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத் துறை முதலிடம் பிடித்தது.

புதுச்சேரி குடியரசு தின விழாவில் அரசு துறைகளின் நலத்திட்டங்களை விவரிக்கும் விதத்தில் அலங்கார வண்டிகள் அணிவகுப்பு நடந்தது. ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை, வேளாண் துறை, கால்நடை துறை, தீயணைப்பு துறை, சுகாதார துறை, உள்ளாட்சி துறை, ஊரக வளர்ச்சி தறை, மகளிர் மேம்பாட்டு துறை என எட்டு அரசு துறை அலங்கார வாகனங்கள் அணி வகுத்தன.

இதில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியின நலத்துறை வாகனம் முதல் பரிசை வென்றது. இதற்கான விருதினை கவர்னர் கைலாஷ்நாதன், ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர் இளங்கோவனியிடம் வழங்கினார்.

இரண்டாவது பரிசை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை வென்றது.

பள்ளி கலை நிகழ்ச்சி


அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சியில் முதல் முறையாக பங்கேற்ற புதுச்சேரி மண்டலம்--1 ஆரம்பப் பள்ளி முதலிடம் பிடித்து பரிசு வென்றது.

தனியார் பள்ளிகளில் தவளக்குப்பம் புனித சூசையப்பர் குளூனி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு பரிசு ஜவகர் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us