தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆதித்யா பள்ளி மாணவர் மன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்பு

 ஆதித்யா பள்ளி மாணவர் மன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்பு

 ஆதித்யா பள்ளி மாணவர் மன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்பு


ADDED : ஜூலை 04, 2026 02:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 02:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா பள்ளியில் 2026---27ம் கல்வியாண்டிற்கான முதன்மை மாணவர்கள் பொறுப்பேற்பு விழா நடந்தது.

ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், வித்யா நாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி, பள்ளி முதல்வர், துணை முதல்வர்கள், இயக்குநர்கள் முன்னிலையில், முதன்மை பொறுப்பேற்கும் மாணவர்கள் நியமனம் செய்யப்பட்டு மாணவர்களின் சீருடை அணிவகுப்பு நடந்தது.

தொடர்ந்து அணிவகுப்பில் கலந்துகொண்டு மாணவர் குழு பொறுப்பாளர்களுக்கு அவரவர் பதவியின் அடையாள சின்னம் அணிவிக்கப்பட்டது.

அதன்படி, பள்ளியின் மாணவர் தலைவராக கவிப்பிரியன், துணைத் தலைவராக அஷ்வின், மாணவியர் தலைவியாக மிருதுல்லா, துணைத் தலைவியாக சாரா தேர்ந்தெடுக்கப்பட்டு அடையாள சின்னங்கள் அணிவிக்கப்பட்டன.

சீனியர், ஜீபிடர், மார்ஸ், நெப்டியூன், வீனஸ் என்று அணி வாரியாக ஜீனியர் மற்றும் சப் ஜீனியர் அளவில் கேப்டன்கள், துணை கேப்டன்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள், பள்ளி நிறுவனர், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் முன்னிலையில் தங்கள் உறுதிமொழியை முன்மொழிந்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us