தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆதித்யா பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் சாதனை

 ஆதித்யா பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் சாதனை

 ஆதித்யா பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் சாதனை


ADDED : மே 15, 2026 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 02:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாணவர் கிரிஷ் 500க்கு 489 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். மாணவர் பிரீதம் 488 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம், மாணவி சகானா 485 மதிப்பெண்களுடன் மூன்றாமிடம், மாணவர்கள் கார்த்திகேயன் மற்றும் தருண் 480 மதிப்பெண்களுடன் நான்காமிடமும் பெற்றுள்ளனர்.

பள்ளியின் 10 மாணவர்கள் பாட வாரியாக 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதில், பிரீதம் உயிரியியலிலும், அபினவ் ஆங்கிலத்திலும், கிரிஷ், சாய்பிரேம் மற்றும் சஞ்சய் கணிதத்திலும், தருண் வேதியியலிலும், கவியரசன், சகானா மற்றும் தருண் கணித அறிவியலிலும், ஷரேயா வணிகவியல் பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளியில் 480 மதிப்பெண்களுக்கு மேல் 5 பேரும், 475க்கு மேல் 10 பேரும், 450க்கு மேல் 69 பேரும், 400க்கு மேல் 279 பேரும் பெற்றுள்ளனர்.

மேலும், பாடவாரியாக ஆ ங்கிலத்தில் 302, கணிதத்தில் 67, இயற்பியலில் 35, வேதியியலில் 116, உயிரியலில் 97, கணித அறிவியலில் 86, உடற்கல்வியலில் 58, வணிகவியலில் 23, கணக்கியலில் 9, பொருளாதாரத்தில் 5, தகவல் நடைமுறையியலில் 6, பயன்பாட்டு கணிதத்தில் 6 பேரும் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்வாகியுள்ள னர்.

பள்ளி அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஆதித்யா பள்ளியின் நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீவித்ய நாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். இதில், பள்ளி முதல்வர், இயக்குநர்கள், பொறுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us