sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆதித்யா பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை

/

ஆதித்யா பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை

ஆதித்யா பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை

ஆதித்யா பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை


ADDED : மே 16, 2025 02:48 AM

Google News

ADDED : மே 16, 2025 02:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ.,பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.

பள்ளி அளவில் மாணவர் ஜோதிராம் 489 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மேலும், இவர், இந்தாண்டு நடந்த ஜே.இ.இ., மெயின் தேர்வில் 99.05 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று புதுச்சேரி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

மாணவர் பிரசாந்த் 486 பெற்று இரண்டாமிடம், மாணவர்கள் சுரேந்தர், ரக் ஷித்தா, பாக்கியா ஆகியோர் 484 பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். பள்ளியில் 11 மாணவர்கள் நுாறு சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மாணவி சுருதி தாவரவியல், மாணவர் அவினாஷ் கணித அறிவியல், பிரசாந்த், பாக்கியா ஆகியோர் வேதியியல், மாணவிகள் ஸ்ரீசாசினி, ஓவியா பொருளாதாரம், மாணவர்கள் துர்கேஷ், முகிலேஷ்வரி, யாழினி, அன்கிதா கோபி நாத்நம்பியார், அகல்யா ஆகியோர் உடற்கல்வி பாடங்களில் சென்டம் எடுத்துள்ளனர்.

பள்ளியில் 480 மதிப்பெண்களுக்கு மேல் 11 பேர், 475க்கு மேல் 23 பேர், 450க்கு மேல் 96 பேர், 400 மதிப்பெண்களுக்கு மேல் 280 பேர் பெற்றுள்ளனர்.

பாட வாரியாக ஆங்கிலத்தில் 284 பேர், கணிதத்தில் 56, இயற்பியலில் 62, வேதியியலில் 155, உயிரியலில் 96, கணித அறிவியலில் 84, உடற்கல்வியலில் 71, வணிகவியலில் 37, கணக்கியலில் 15, பொருளாதரத்தில்81, தகவல் நடைமுறையியலில் 16, பயன்பாட்டு கணிதத்தில் 6 மாணவர்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீவித்ய நாராயணா அறக்கட்டளை டிரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர். பள்ளி முதல்வர், இயக்குநர்கள், பொறுப்பாசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.






      Dinamalar
      Follow us