தேசிய ஜே.இ.இ., முதன்மை தேர்வில் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி அசத்தல்
தேசிய ஜே.இ.இ., முதன்மை தேர்வில் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி அசத்தல்
ADDED : ஏப் 25, 2026 09:17 PM

புதுச்சேரி: அகில இந்திய அளவிலான ஜே.இ.இ., முதன்மைத் தேர்வு முடிவுகளில், ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளது.
அண்மையில் ஜே.இ.சி., முதன்மை நிலை தேர்வு முடிவு வெளியானது. இத்தேர்வில் நாடு முழுதும் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் கார்த்திகேயன் 99.963 சதவீதத்துடன் மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் 660-வது இடத்தை பிடித்து, புதுச்சேரி மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
மாநில முதலிடம் மட்டுமன்றி, இப்பள்ளியின் மேலும் பல மாணவர்கள் அகில இந்திய அளவில் சிறந்த தரவரிசையை பெற்றுள்ளனர். மாணவர்கள் கிரிஷ் - 743-வது இடம், தருனேஷ்-856, தருண்ராஜ்-1083, சாய்பிரேம்-1229,பிரித்தீஷ்-1620, பிரித்தீஷ்-2096-வது இடத்தினை பெற்று சாதித்துள்ளனர்.
99.9 சதவீதத்திற்கு மேல் 6 மாணவர்கள், 99.5 சதவீதத்திற்கு மேல்-9 பேர், 95 சதவீதத்திற்கு மேல் 47 பேர், 90 சதவீதத்திற்கு மேல்-77 மாணவர்கள் மதிப்பெண் எடுத்துள்ளனர். அவர்களை பள்ளி நிறுவனர் ஆனந்தன், பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீ வித்யா நாராயணா அறக்கட்டளை டிரஸ்டி அனுதாபூனமல்லி, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
பள்ளி நிறுவனர் ஆனந்தன் கூறுகையில், 'மாநில அளவில் அதிகப்படியான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள ஒரே பள்ளி என்ற பெருமையை ஆதித்யா வித்யாஷ்ரம் பெற்றுள்ளது. ஆறாம் வகுப்பு முதலே நீட், ஜே.இ.இ., ஜிப்மர் , சி.ஏ., மற்றும் ஐ.ஏ.எஸ்., போன்ற உயர்மட்டப் போட்டித் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சியை ஆதித்யா கல்விக்குழுமம் வழங்கி வருகிறது. வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த, ஆசிரியர், பெற்றோருக்கு பாராட்டுகள்' என்றார்.
