/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி ஆவணம் மூலம் கோவில் நிலம் அபகரிப்பு காங்., நிர்வாகி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
/
போலி ஆவணம் மூலம் கோவில் நிலம் அபகரிப்பு காங்., நிர்வாகி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
போலி ஆவணம் மூலம் கோவில் நிலம் அபகரிப்பு காங்., நிர்வாகி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
போலி ஆவணம் மூலம் கோவில் நிலம் அபகரிப்பு காங்., நிர்வாகி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
ADDED : செப் 25, 2024 08:02 PM

காரைக்கால்:காரைக்காலில் கோவில் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்தது தொடர்பாக, திருநள்ளாறு வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் சிவகுமாரை, தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த தக்களூர் கிராமத்தில் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட திருலோகநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலம் உள்ளது. இந்தக் கோவிலை தற்போது காரைக்குடியைச் சேர்ந்த நாகராஜ் குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர்.
கோவிலின் பல ஏக்கர் நிலம் போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
கோவில் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த நித்யானந்தம், சிவகுமார் ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருநள்ளாறு வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த நாதன் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், திருலோகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்துக்கு, 2008ம் ஆண்டு போலி ஆவணம் தயாரித்து, திருநள்ளாறு பகுதியில் வசித்த நித்யானந்தம் என்பவர், திருநள்ளாறு சுப்ராயபுரம் சாலையை சேர்ந்த வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் சிவகுமார், 57, என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.
பின் சிவகுமார், தன் தாய் மற்றும் உறவினர்கள் பெயரில் பல முறை மாற்றி பதிவு செய்துள்ளது தெரிந்தது.
இதையடுத்து சிவகுமார் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, சிவகுமார் தலைமறைவானார்.
இந்நிலையில், சிவகுமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த போலீசார், அவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் காரைக்கால் எஸ்.பி., 94892 05353, திருநள்ளாறு போலீஸ் ஸ்டேஷன் 04368 -236465 ஆகிய எண்களில் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், தகவல் தெரிவிப்பவரின் விபரம் ரகசியமாக வைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.