/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிங்கிரிகுடி கோவில் இடங்கள் நிர்வாக அதிகாரி ஆய்வு
/
சிங்கிரிகுடி கோவில் இடங்கள் நிர்வாக அதிகாரி ஆய்வு
ADDED : ஏப் 07, 2025 06:13 AM

புதுச்சேரி; சிங்கிரிகுடி கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இக்கோவில்களுக்கு வருவாயை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி தாசில்தார் பிரிதிவி, அபிேஷகபாக்கத்தில் உள்ள விநாயகர், முத்தாலம்மன், நல்லதம்பி ஐயனாரப்பன், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட கோவில்களின் நிர்வாக அதிகாரியாக அண்மையில் நியமிக்கப்பட்டார்.
அவர், கோவில் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற நிலையில் நேற்று முதல் முறையாக கரிக்கலாம்பாக்கம், அபிேஷகபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இக்கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆய்வு செய்தார். குறிப்பாக பிரெஞ்சு மானியத்தின் கீழ் உள்ள பகுதிகளை ஆய்வு செய்தார்.
இக்கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் பெரும்பாலும் நெல் பயிரிடப்பட்டு இருந்தது. தொடர்ந்து தரிசாக இருந்த இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவில் நிர்வாக அதிகாரி பிரிதிவி கூறுகையில், 'இக்கோவில் நிலங்களில் வருவாயை உயர்த்தி, இறைப்பணிகளுக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இதேபோல் இக்கோவில்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் ஆவணப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.

