தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளியில் பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கை: ஏப்., 20ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்

 அரசு பள்ளியில் பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கை: ஏப்., 20ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்

 அரசு பள்ளியில் பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கை: ஏப்., 20ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்


ADDED : ஏப் 17, 2026 07:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 07:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

​புதுச்சேரி பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2026-27ம் கல்வியாண்டிற்கான பிளஸ்-1 மாணவர் சேர்க்கை துவங்க உள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், வரும் ஏப்ரல் 20ம் தேதி முதல் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் பள்ளிகளிலேயே விண்ணப்பங்களைப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, அதே பள்ளிகளிலேயே சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஏப்ரல் 30-ம் தேதி கடைசி நாளாகும்.​ மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்த விரிவான அறிவுறுத்தல்கள் அந்தந்த பள்ளிகளிலேயே வழங்கப்படும்.

மேலும், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாநில கல்வி வாரியங்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு தனியாக வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us