/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 13, 2024 07:13 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து, பொதுவிநியோக திட்டத்தை செயல்படுத்த கோரி அ.தி.மு.க., சார்பில் தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல் துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:
உணவு பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம் உணவு பொருட்கள் இலவசமாகவும், பொது விநியோக திட்டம் மூலம் அத்தியாவசிய உணவு பொருட்கள் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த காங்., தி.மு.க., ஆட்சியில் இரு திட்டங்களும் முழுமையாக நிறுத்தி, ரேஷன் கடைகளை மூடினர். ஆளும் அரசும் ரேஷன் கடைகளை திறக்கவில்லை. தற்போது அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை கடந்த ஒராண்டில் 50 சதவீதம் மேல் உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் பணத்திற்கு பதில் உணவு பொருட்கள் வழங்க வேண்டும்.
கடந்த ஒராண்டிற்கு முன்பு ரூ.40க்கு விற்ற ஒரு கிலோ அரிசி தற்போது ரூ.65க்கும், 60 ரூபாய்க்கு விற்ற பூண்டு இன்று ரூ. 360க்கும்,ரூ. 110க்கு விற்ற பருப்பு, ரூ.170க்கு விற்கப்படு கிறது.
இந்த விலையேற்றத்தை அரசு கட்டுப்படுத்த தவறி விட்டது என பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.எல். ஏ.,க்கள், பாஸ்கர், ராஜாராமன், கோமலா, இணை செயலாளர்கள் கணேசன், பொருளாளர் ரவிபாண்டுரங்கன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கடைகளில் அதிக விலைக்கு விற்பனையாகும் பூண்டு, அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை கையில் ஏந்திய படி கலந்து கொண்டனர்.