/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாண்புகளை மீறும் சபாநாயகர் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
/
மாண்புகளை மீறும் சபாநாயகர் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
மாண்புகளை மீறும் சபாநாயகர் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
மாண்புகளை மீறும் சபாநாயகர் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
ADDED : அக் 20, 2024 05:37 AM
புதுச்சேரி : புதுச்சேரி சபாநாயகர் மரபுகளையும், மாண்புகளை மீறி செயல்பட்டு வருவதாக, அ.தி.மு.க., செயலாளர் மாநில செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர், கூறியதாவது:
புதுச்சேரியில் போதை பொருள் விற்பனையால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். அப்படி எனில் அவர் நடத்தும், 10க்கும் மேற்பட்ட கடைகளை அரசிடம் ஒப்படைக்க தயாரா?
தமிழகத்தில், 40 மாத தி.மு.க., ஆட்சியில், 20க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் என்கவுண்ட்டர் செய்யப் பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் ஏன் அங்கு என்கவுண்டர் நடக்கிறது. புதுச்சேரியில் பா.ஜ.,வை சேர்ந்த சபாநாயகர் தொடர்ந்து மரபுகளையும், மாண்புகளையும் மீறி வருகிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், சட்டசபைக்கு வெளியே அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தன்னை அழைக்க வேண்டும் என, அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த காலங்களில் சபாநாயகர் சம்மந்தமான மரபுகள் மீறப்பட்டிருந்தாலும், மீண்டும் அதை கவர்னர் அனுமதிக்கக்கூடாது. முதல்வர் எதிரிலேயே சபாநாயகருக்கும், நேரு எம்.எல்.ஏ.,விற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.