/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருமணமான பெண்ணை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு வாலிபர் அடம்
/
திருமணமான பெண்ணை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு வாலிபர் அடம்
திருமணமான பெண்ணை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு வாலிபர் அடம்
திருமணமான பெண்ணை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு வாலிபர் அடம்
ADDED : பிப் 21, 2024 09:09 AM
புதுச்சேரி: திருமணமான பெண்ணை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு ஏனாம் போலீசிடம் அடம் பிடித்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ளது. ஏனாமைச் சேர்ந்த 23 வயது வாலிபர், காக்கிநாடாவில் பொறியியல் கல்லுாரியில் படித்தபோது, ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார்.
இருவரும் வேறு வேறு சமூகத்தினர் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன், ஆந்திர பெண்ணுக்கு திருமணம் நடந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன், கல்லுாரி தேர்வு எழுத வீட்டிலிருந்து சென்ற பெண், ஏனாமில் காதலன் வீட்டிற்கு சென்று தங்கினார். இதை அறிந்த பெண் வீட்டார் ஏனாம் வாலிபர் வீட்டில் உள்ள பெண்ணை அழைத்து செல்ல வந்தனர்.
வேறு ஒருவருடன் திருமணமான தனது காதலியை அழைத்து கொண்டு ஏனாம் போலீஸ் நிலையம் வந்த வாலிபர் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
திருமணத்திற்கு முன்பு வந்தால், எங்களால் முடிந்த உதவியை செய்வோம். அப்பெண்ணுக்கு திருமணம் முடிந்துவிட்டது. முறைப்படி விவகாரத்து பெற்று வந்தால் அழைத்து செல். மீறினால் பெண்ணின் பெற்றோர் அளிக்கும் புகாரின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
இதை கேட்ட ஏனாம் வாலிபர், சினிமா படத்தில் வரும் காட்சியை போல், என்னை சேர்த்து வையுங்கள் இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி, தனது சட்டையை கிழித்து கொண்டு, சுவற்றில் மோதி தற்கொலைக்கு முயன்றார்.
அங்கிருந்த அந்த வாலிபரின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் அறிவுரை கூறி அவரை அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

