தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணக்குள விநாயகர் கல்லுாரிக்கு விருது 

மணக்குள விநாயகர் கல்லுாரிக்கு விருது 

மணக்குள விநாயகர் கல்லுாரிக்கு விருது 


UPDATED : ஏப் 30, 2026 10:32 PM

ADDED : ஏப் 30, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2026 10:32 PM ADDED : ஏப் 30, 2026 09:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரிக்கு, சக்சஸ்வெர்ஸ் உயர் கல்வி சிறப்பு மாநாட்டில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள எம்.எம்.ஏ அரங்கில் நடந்த சக்சஸ்வர்ஸ் உயர்கல்வி சிறப்புத்திறன் மாநாட்டில் 'நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள்' சமர்ப்பிக்கும் போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட சிறந்த நடைமுறைகளை சமர்ப்பித்தன. அவற்றில் 101 சிறந்த நடைமுறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

அதில், மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி சமர்ப்பித்த இரண்டு சிறந்த நடைமுறைகள் தேர்வு செய்யப்பட்டது. கல்லுாரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை டீன் வள்ளி, எஸ்.டி.ஜி., மற்றும் ஐ.பி.ஆர்., தொடர்பான சிறந்த இரண்டு நடைமுறைகளை தயாரித்து, துறைகளில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளை விளக்கும் விரிவான அறிக்கையையும் சமர்ப்பித்திருந்தார்.

இதற்கு உறுதுணையாக இ.சி.இ., துறையின் இணை பேராசிரியர் சோபியா, சி.எஸ்.இ., துறையின் உதவி பேராசிரியர் இந்துமதி ஆகியோர் இருந்தனர். இதையொட்டி, தேர்வு செய்யப்பட்ட மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரிக்கு முதல்வர் மலர்க்கண்ணிடம் 'நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் விருது' வழங்கப்பட்டது.

இந்த விருது, மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி, கல்வித் துறையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதற்கான ஒரு முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us