sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 விளம்பர செய்தி இலவச மருத்துவ முகாம் 

/

 விளம்பர செய்தி இலவச மருத்துவ முகாம் 

 விளம்பர செய்தி இலவச மருத்துவ முகாம் 

 விளம்பர செய்தி இலவச மருத்துவ முகாம் 


ADDED : மார் 13, 2026 06:20 AM

Google News

ADDED : மார் 13, 2026 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரைடு, ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி விஷன், கிட்னி சென்டர் மருத்துவமனை மற்றும் பாண்டிச்சேரி கிட்னி பவுண்டேஷன் இணைந்து சிறுநீரக நோய் விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாமை, அண்ணா சாலையில் உள்ள கிட்னி சென்டர் மருத்துவமனையில் நடத்தியது.

முகாமிற்கு, சிறுநீரக நிபுணர் நாராயணன் தலைமை தாங்கினார். மாவட்ட கவர்னர் வைத்தியநாதன், டாக்டர் வனஜா வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் சிறுநீரக செயல்பாடு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு குறித்து மருத்துவர்கள் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினர். முகாமில் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிகழ்ச்சியில் ரோட்டரி நிர்வாகிகள், மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us