தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விளம்பர செய்தி எலும்பு புற்றுநோயால் பாதித்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை

 விளம்பர செய்தி எலும்பு புற்றுநோயால் பாதித்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை

 விளம்பர செய்தி எலும்பு புற்றுநோயால் பாதித்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை


ADDED : மார் 04, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 04:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செய்தி மட்டும்: புதுச்சேரி: மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 27 வயது இளைஞருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதில், முழு காலை அகற்றும் சிகிச்சைக்கு பதிலாக, டாக்டர்கள் டிபியா எலும்பில் இருந்த கட்டியை முழுமையாக பாதுகாப்பான எல்லைகளுடன் அகற்றினர். பின், அந்த எலும்பு மற்றும் முழங்கால் மூட்டு பகுதியில் தனிப்பயன் செயற்கை எலும்பு (எண்டோப்ரோஸ்தெசிஸ்) பொருத்தப்பட்டது.

இந்த நவீன அறுவை சிகிச்சை மூலம் நோயாளி நீண்டகாலம் புற்றுநோய் இல்லாமல் வாழ வாய்ப்பு உள்ளது. கால் செயல்பாடு இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் அமைக்கப்பட்டதால், விரைவில் வழக்கமான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

இந்த அறுவை சிகிச்சையை எலும்பு புற்றுநோய் சிறப்பு டாக்டர்கள் பிரகாஷ், சத்யநாராயணன், உதயகுமார், வெற்றி, வித்யாபிரகாஷ், அறுவை புற்றுநோய் நிபுணர் விக்னேஷ்வரன் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் விஜயராகவன் ஆகியோர் இணைந்து வெற்றிகரமாக மேற்கொண்டனர். இந்த சாதனை, எலும்புப் புற்றுநோய்க்கு மேம்பட்ட சிகிச்சை முறைகள் கிடைப்பதை நிருபிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us