ADDED : ஏப் 17, 2026 11:39 PM

நெட்டப்பாக்கம்: ஏம்பலம் பாலாஜி மேல்நிலைப் பள்ளி 30ம் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் அழகப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரங்கநாதன், இணை செயலாளர் சம்பத், பொருளாளர் சிவா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் ஏம்பலம் பாலாஜி மேல்நிலைப் பள்ளி தாளாளர் அழகப்பன், பள்ளியில் 2024-25ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ரூ. 2 லட்சம் காசோலையும், மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த இரண்டு மாணவிகளுக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் கேடயங்களை பள்ளி சார்பில் வழங்கினார்.
பின், பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்கள், சென்டம் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். நெட்டப்பாக்கம் பாலாஜி சிக் ஷா மந்திர் பள்ளி நிர்வாகி பாலாஜி பள்ளியில் நுாறு சதவீதம் வருகை தந்த மாணவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
