வருமான வரி சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
வருமான வரி சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
UPDATED : மே 11, 2026 06:58 PM
ADDED : மே 11, 2026 06:51 PM
புதுச்சேரி: புதுச்சேரி தனியார் ஹோட்டலில் வருமான வரி சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இந்திய செலவு கணக்காளரர்கள் நிறுவனம் சார்பில் புதுச்சேரி கிளையின் வரி ஆராய்ச்சி துறை மற்றும் வருமான வரித்துறை இணைந்து வருமானம் வரி சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுச்சேரி தனியார் ஹோட்டலில் நடந்தது.
புதுச்சேரி கிளை தலைவர் பத்மபிரியா வரவேற்றார். சென்னை செலவுக் கணக்காளர் (சி.எம்.ஏ.) ரவிசங்கர், புதுச்சேரி செலவுக் கணக்காளர் (சி.எம்.ஏ.) விக்னேஷ்வரன் ஆகியோர் ஆண்டு வருமான வரி சட்டத்தின் பற்றி பேசினர். சிறப்பு விருந்தினராக சுரேஷ், வருமான வரி சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், முக்கிய அம்சங்கள், நடைமுறை விளைவுகள் மற்றும் புதிய மாற்றங்கள், கருத்தரங்குகள், கூட்டங்கள், பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கல்விசார் முயற்சிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், புதுச்சேரி கிளையின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் நிறுவனத்தின் பங்கு, தொழில் முறை மேம்பாடு குறித்தும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொழில்முறை உறுப்பினர்கள், வருமான வரித்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள், நிறுவன நிர்வாகிகள், வரி ஆலோசகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி கிளை செயலாளர் கோகுல் நன்றி கூறினார்.
