/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிப்ளமோ படிப்புகளுக்கு கவுன்சிலிங் முன்னுரிமை கொடுக்க அறிவுறுத்தல்
/
டிப்ளமோ படிப்புகளுக்கு கவுன்சிலிங் முன்னுரிமை கொடுக்க அறிவுறுத்தல்
டிப்ளமோ படிப்புகளுக்கு கவுன்சிலிங் முன்னுரிமை கொடுக்க அறிவுறுத்தல்
டிப்ளமோ படிப்புகளுக்கு கவுன்சிலிங் முன்னுரிமை கொடுக்க அறிவுறுத்தல்
ADDED : அக் 07, 2024 06:13 AM
புதுச்சேரி: உயிரியல் சார்ந்த டிப்ளமோ, சட்ட தொழிற்படிப்பு மாப் அப் கவுன்சிலிங் பங்கேற்க இன்றுக்குள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.
நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை அல்லாத உயிரியல் சார்ந்த டிப்ளமோ படிப்புகளுக்கும், சட்ட படிப்பு, தொழிற்படிப்புகளுக்கு ஆன்லைன் மாப் அப் கவுன்சிலிங் நடத்த சென்டாக் முடிவு செய்துள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களுடைய லாகின் மூலம் உள்ளே நுழைந்து இன்று 7ம் தேதி மாலை 3:00 மணிக்குள் விருப்பத்தை தெரிவிக்கலாம். இந்த மாப் அப் கவுன்சிலிங்கில் சீட் ஒதுக்கப்பட்டால் ஏற்கனவே முதல் நான்கு கவுன்சிலிங்கில் கிடைத்தச சீட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விடும்.
முன்னுரிமை கொடுக்காவிட்டால் அம்மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிரம்பாத ஓ.பி.சி., எம்.பி.சி., முஸ்லீம், எஸ்.சி., எஸ்.டி., பி.டி., சீட்டுகள் அனைத்தும் பொது பிரிவுக்கு மாற்றப்பட்டு விடும். இதேபோல், கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கும் மாப் அப் கவுன்சிலிங் விரைவில் நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.