/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில் விபத்தை தடுக்க ஆலோசனை
/
நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில் விபத்தை தடுக்க ஆலோசனை
நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில் விபத்தை தடுக்க ஆலோசனை
நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில் விபத்தை தடுக்க ஆலோசனை
ADDED : ஆக 31, 2025 05:59 AM
புதுச்சேரி : நோணாங்குப்பம் ஆற்றுப் பாலத்தில் விபத்தை தடுக்க போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.
நாகப்பட்டினம் - விழுப்புரம் பை பாஸ் புதுச்சேரி வழியாக செல்கிறது. பைஸ் பாசில் வாகனங்கள் சென்றாலும், கடலுார் - புதுச்சேரி சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் நடந்து வருகிறது.
கன்னியக்கோவிலில் இருந்து, மரப்பாலம் வரை வாகன விபத்தில் சிக்குபவர்கள் உயிரிழப்பது தொடர் கதையாக உள்ளது.
விபத்தை தடுக்கும் வகையில், கன்னியக்கோவில் முதல், தவளக்குப்பம் வரை, பார், கடை, தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள் நடத்துபவர்களின் வசதிக்காக பல இடங்களில் இடைவெளி விட்டு, தடுப்புகட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், தடுப்பு கட்டைகள் அமைத்தும் பயனில்லாமல் இருப்பது மட்டுமின்றி, விபத்தையும் தடுக்க முடியவில்லை.
அரியாங்குப்பத்தில், கடந்த இரு வாரத்திற்கு முன், அரசு பஸ் மோதி கணவருடன் பைக்கில் சென்ற மனைவி இறந்தார்.
கடந்த வாரம் டைல்ஸ் கடையில் வேலை செய்து விட்டு, ஸ்கூட்டரில் சென்ற பெண், வேன் மோதி இறந்தார்.
கடந்த 28ம் தேதி, நோணாங்குப்பம் ஆற்றுப்பாலத்தில், கார் மோதி, பைக்கில் சென்ற தனியார் பஸ் டிரைவர் இறந்தார். இரண்டு வாரத்தில் மட்டுமே விபத்துக்களில் 3 பேர் இறந்துள்ளனர்.
இதனிடையே நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில் பைக் மீது கார் மோதிய இடத்தை, டி.ஜ.ஜி., சத்தியசுந்தரம், போக்குவரத்து சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன், எஸ்.பி, பாக்தவச்சலம் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின், பொதுப்பணித்துறை உயரதிகாரியை சந்தித்தனர். அதில், பழைய கடலுார் சாலை, இடையார்பாளையம் முதல் நோணாங்குப்பம் வரை பழைய ஆற்று பாலத்தை சீரமைத்து, ஒரு வழிப்பாதையாக மாற்றுவது.
நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில், இலுமுனேஷன் மற்றும் புளோரோசன்ட் லைட் பொருத்துவது, இரவு நேரத்தில் கூடுதலாக, மின் விளக்கு அமைப்பது, சாலையில், வெள்ளை கோடு அடிக்க வலியுறுத்தினர்.
இதை செய்தால், வாகன விபத்தை தடுக்க முடியும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

