/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க ஆலோசனை கூட்டம்
/
கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 19, 2024 05:26 AM

புதுச்சேரி: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத்தை தனிப்பது பற்றி ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. மேலும் வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானொலி ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதையடுத்து கோடை வெப்பத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க கலெக்டர் அலுவலகத்தில், நேற்று அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். அதில், வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாக்க, அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில், சுகாதாரத்துறை, பொதுபணித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்கள், மின்துறை, சமூக நலத்துறை, கால்நடைத்துறை, கல்வித்துறை ஆகிய துறைகளில் இருந்து அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

