/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.எப்.டி., தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பால் பரபரப்பு

ADDED : டிச 15, 2024 05:45 AM
புதுச்சேரி : ஏ.எப்.டி., தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு நிலுவை தொகையை வழங்காத அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரஞ்சு ஆட்சியாளர்களால் கடந்த 1898ம் ஆண்டு துவக்கப்பட்ட ஆங்கிலோ பிரஞ்சு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனமான (ஏ.எப்.டி) மில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது.
மூடப்பட்ட மில் தொழிலாளர்களுக்கு இழப்பீடு நிலுவை தொகை வழங்காததை கண்டித்து, ஏ.எப்.டி., மில் ஒருங்கிணைந்த ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மில் அலுவலக வாயில் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பு நிர்வாகி முத்தமிழன் தலைமை தாங்கினார்.
நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இப்போராட்டத்தில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கர், லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., மற்றும் பா.ஜ., ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.