sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேளாண் வளர்ச்சி பிரசார இயக்கம்

வேளாண் வளர்ச்சி பிரசார இயக்கம்

வேளாண் வளர்ச்சி பிரசார இயக்கம்


ADDED : மே 31, 2025 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2025 01:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வேளாண்துறை மூலம் 'விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான்' வேளாண் வளர்ச்சி பிரசார இயக்கம் நிகழ்ச்சி நடந்தது.

மத்திய அரசின் வேளாண் அமைச்சகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வலியுறுத்தலின்படி, 'விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான்' எனும் வேளாண் வளர்ச்சி பிரசார இயக்கம் நிகழ்ச்சி 29ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை நடக்கிறது.

பிரசார இயக்கத்தில் வரும் சம்பா பருவத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள், அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.

அதன்படி, காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த வேளாண் வளர்ச்சி பிரசார இயக்க நிகழ்ச்சிக்கு, வேளாண் அலுவலகம் வெங்கடாசலம் வரவேற்றார்.

வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி ஸ்ரீவித்யா கலந்து கொண்டு, பயிர் மேலாண்மை, நவீன விவசாய தொழில்நுட்பங்கள், இயற்கை வேளாண்மை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், கால்நடை மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

உதவி வேளாண் அலுவலர் கண்ணாயிரம் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை களப்பணியாளர்கள் ஆதிநாராயணன், ஏழுமலை, குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us