/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பூச்சிக்கொல்லி ஆய்வகத்திற்கு வேளாண் அலுவலர் நியமனம்
/
பூச்சிக்கொல்லி ஆய்வகத்திற்கு வேளாண் அலுவலர் நியமனம்
பூச்சிக்கொல்லி ஆய்வகத்திற்கு வேளாண் அலுவலர் நியமனம்
பூச்சிக்கொல்லி ஆய்வகத்திற்கு வேளாண் அலுவலர் நியமனம்
ADDED : ஏப் 17, 2025 04:47 AM
புதுச்சேரி: பூச்சிக்கொல்லி ஆய்வகத்தில் கடந்த 2 ஆண்டாக காலியாக இருந்த வேளாண் ஆய்வாளர் பணியிடம் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக நியமிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்திட வேளாண் துறை சார்பில் தட்டாஞ்சாவடியில் தனி ஆய்வகம் உள்ளது. இங்கு, வேளாண் அலுவலர் பணியிடம் கடந்த 2 ஆண்டாக காலியாக உள்ளது. இதனால், பூச்சிக்கொல்லி மருந்துகளை பரிசோதிக்காமலே விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வேளாண் துறை செயலர் நெடுஞ்செழியன் உத்தரவின் பேரில், ஆய்வக பயிற்சி பெற்ற பாகூர் உழவர் உதவியகத்தில் பணியாற்றி வரும் வேளாண் அலுவலர் பரமநாதனுக்கு கூடுதல் பொறுப்பாக தட்டாஞ்சாவடியில் உள்ள பூச்சிக்கொல்லி ஆய்வகத்தின் ஆய்வாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.