/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெற்பயிரில் இலை சுருட்டு புழு வேளாண் அதிகாரிகள் ஆய்வு
/
நெற்பயிரில் இலை சுருட்டு புழு வேளாண் அதிகாரிகள் ஆய்வு
நெற்பயிரில் இலை சுருட்டு புழு வேளாண் அதிகாரிகள் ஆய்வு
நெற்பயிரில் இலை சுருட்டு புழு வேளாண் அதிகாரிகள் ஆய்வு
ADDED : நவ 20, 2024 05:26 AM

வானுார்: வானுார் தாலுகாவில், நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல் வயல்களில் இலை சுருட்டு புழு தாக்குதலை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வானுார் தாலுகாவில் நடப்பு சம்பா பருவத்தில் 7,500 ஏக்கர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தைலாபுரம், கொஞ்சுமங்கலம், அறுவடை, காரட்டை, உப்புவேலுார், புதுகுப்பம் கிராமங்களில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு வளர்ச்சி பருவத்தில் உள்ளது.
கடந்த வாரம் பெய்த மழை காரணமாக நெல் பாபட்டலா ரகத்தில் அதிகளவில் இலை சுருட்டு புழு தாக்குதல் தென்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நெல் வயலில் வேளாண்மை துறை உதவி இயக்குனர் எத்திராஜ் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
அதில், அதிகப்படியான தழைச்சத்து இடுவதாலும், குறைந்த பகல் நேர வெப்பநிலை, அதிக ஈரப்பதம் போன்ற காரணங்களால் பூச்சி தாக்குதல் அதிகரித்திருப்பது தெரியவந்தது. விவசாயிகள், ஏக்கர் ஒன்றுக்கு தையோ மீத்தாக்சாம் 50 கிராம், பிப்ரோனில் 400 கிராம், அல்லது ப்ளூ பென்டமைடு 50 கிராம், குளோர் ஆன்ரனிபுரோல் 60 மி.கிராம் ஆகிய ஏதாவது ஒரு மருந்தை தெளித்து, இலை சுருட்டு புழுவிலிருந்து இருந்து நெற்பயிரை பாதுகாத்துக் கொள்ளலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ஆய்வின்போது முன்னோடி விவசாயி கொஞ்சுமங்கலம் மூர்த்தி, துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண் அலுவலர்கள் தங்கம், பஞ்சநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.