/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏனாம் பிராந்தியத்தில் வேளாண் குழு ஆய்வு
/
ஏனாம் பிராந்தியத்தில் வேளாண் குழு ஆய்வு
ADDED : டிச 16, 2024 05:00 AM
புதுச்சேரி : புயலால் பாதிக்கப்பட்ட ஏனாம் பிராந்தியத்தில் காரைக்கால் பஜன்கோ, வேளாண் அறிவியல் நிலைய குழுவினர் பார்வையிட்டு விவசாயிகளுக்கு பயிர் ஆலோசனைகளை வழங்கினர்.
பெஞ்சல் புயலால் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்கள் மட்டுமின்றி, ஏனாம் பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் நாசமானது. அதையடுத்து, வேளாண் இயக்குநர் வசந்தகுமார் உத்தரவின்படி காரைக்கால் பஜன்கோ, வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர் ஏனாமில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இக்குழுவினரை வேளாண் துணை இயக்குநர் சிவசுப்ரமணியன் வரவேற்றார். தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணன் தலைமையிலான இக்குழுவினர், பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட ஏனாம் ஆதிவிபொலேம், பராம்பேட்டா மற்றும் மெட்டாகூர் கிராமங்களில் கள ஆய்வுகளை நடத்தினர். விவசாயிகளுடன் கலந்துரையாடி, ஆலோசனை வழங்கினர். சேதத்தை மதிப்பீடு செய்தனர்.
சேதமடைந்த பயிர்களை மீட்டெடுக்கும் வழிமுறைகள், இழப்புகளைக் குறைப்பதற்கான நுட்பங்கள், பலவீனமான பயிர்களில் பூச்சி தடுக்கும் நடவடிக்கைகள், கனமழையால் பாதிக்கப்பட்ட மண் வளத்தை மேம்படுத்துவதற்கான உத்திகள், சூறாவளி எதிர்ப்பு பயிர் நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.

