/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாய தொழிலாளர்கள் பேரவை கூட்டம்
/
விவசாய தொழிலாளர்கள் பேரவை கூட்டம்
ADDED : மார் 05, 2026 04:47 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தில் பேரவை கூட்டம் திருக்கனுாரில் நடந்தது.
மாநில செயலாளர் அருள் தலைமை தாங்கினார்.
துணை செயலாளர் பெருமாள் வரவேற்றார். மாநில தலைவர் குப்புசாமி, தொகுதி தலைவர் மன்னாதன், துணை செயலாளர் பத்மநாதன், பொருளாளர் முருகையன் முன்னிலை வகித்தனர்.
இதில், முன்னாள் துணை சபாநாயகர் செல்வம், தமிழ் மாநில செயலாளர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினர்.
நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, ராஜன், ராமச்சந்திரன், மூர்த்தி, கோகுல் கிரிஸ்டிபன், ஜீவா கணேஷ், தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துவழங்கிட வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கி, வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்திட வேண்டும்.
விவசாய தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியம் ரூ. 500 வழங்கி வேண்டும் உள்ளிட்ட பல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

