/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய குடிநீர் பைப் லைன் வேளாண் அமைச்சர் பூமி பூஜை
/
புதிய குடிநீர் பைப் லைன் வேளாண் அமைச்சர் பூமி பூஜை
புதிய குடிநீர் பைப் லைன் வேளாண் அமைச்சர் பூமி பூஜை
புதிய குடிநீர் பைப் லைன் வேளாண் அமைச்சர் பூமி பூஜை
ADDED : பிப் 13, 2024 04:55 AM

வில்லியனுார்: புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில் வடமங்கலம் கிராமம் முழுவதும் புதிய குடிநீர் பைப் லைன் அமைப்பதற்கு வேளாண் அமைச்சர் தேனீஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார்.
மங்கலம் தொகுதி வடமங்கலம் மற்றும் அதனை சுற்றி உளள் புதிய நகர் பகுதிகளுக்கு பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு சார்பில் ரூ.31.95 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய குடிநீர் பைப் லைன் அமைப்பதற்கு வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் நேற்று பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, கிராம குடிநீர்த்திட்ட இளநிலைப் பொறியாளர் சுதர்சனம், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலைப் பொறியாளர் ரங்கமன்னார் மற்றும் வடமங்கலம் கிராம முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.