தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லட்சிய ஜனநாயக கட்சியில் ஏ.ஐ., தொழில்நுட்ப பிரிவு துவக்கம்

 லட்சிய ஜனநாயக கட்சியில் ஏ.ஐ., தொழில்நுட்ப பிரிவு துவக்கம்

 லட்சிய ஜனநாயக கட்சியில் ஏ.ஐ., தொழில்நுட்ப பிரிவு துவக்கம்


ADDED : பிப் 24, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 04:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லட்சிய ஜனநாயக கட்சியில் ஏ.ஐ., தொழில்நுட்ப துவக்கப்படுவதாக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி மாநிலத்தை ஒரு முன்னோடியாக மாற்றும் நோக்கில், இந்தியாவின் முதல் அரசியல் கட்சியாக ஏஐ (செயற்கை நுண்ணறிவுப் பிரிவு) தொடங்குவது குறித்து அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. இந்த ஏஐ பிரிவு நவீன தொழில் நுட்பத்தை ஜனநாயகத்தோடு இணைக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.

இது வெறும் அரசியல் மாற்றம் மட்டுமல்ல, பொதுச் சேவையோடு தொழில்நுட்பத்தையும் இணைத்து எதிர்காலத்திற்குத் தயாராகும் ஒரு முயற்சியாகும். மக்களுக்கும் தலைமைக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து, அரசியல் செயல்பாடுகளை எளிமையாகவும் வேகமாகவும் மாற்ற இது உதவும். இதன் மூலம் மக்களுடன் நெருக்கமான தொடர்பையும், அவர்களின் கருத்துகளை கேட்டறியவும், வெளிப்படையான மற்றும் பொறுப்புள்ள நிர்வாகத்தை வழங்கவும் இது வழிவகை செய்யும்.

புதிய கண்டுபிடிப்புகள் மக்களுக்காகவே இருக்க வேண்டும். இந்தியாவின் அரசியல் கட்சிகள் எதிர்காலத்தை முன்னிறுத்தி இத்தகைய முயற்சிகளை எடுக்க வேண்டும். இந்த புதிய தொடக்கத்தின் மூலம், நவீன புதுச்சேரியை உருவாக்குவதில் தனது உறுதியான பங்களிப்பை இக்கட்சி மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us