/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவர்களை அலட்சியப்படுத்தும் அரசு அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
/
மீனவர்களை அலட்சியப்படுத்தும் அரசு அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
மீனவர்களை அலட்சியப்படுத்தும் அரசு அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
மீனவர்களை அலட்சியப்படுத்தும் அரசு அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
ADDED : டிச 27, 2025 05:15 AM
புதுச்சேரி: மீனவர் நலன் சார்ந்த திட்ட அறிவிப்புகள் செயல் வடிவம் பெறாமல் இருப்பது, மீனவர்களை அலட்சியப்படுத்தும் செயல் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து, அவர், கூறியதாவது;
இயற்கை சீற்றங்களால், முதலில் பாதிக்கப்படுவது மீனவ சமுதாய மக்கள் தான். அந்த மீனவ சமுதாய மக்களுடைய வாழ்வாதாரத்தை சரி செய்ய வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. சுனாமி பேரலை தாக்கி, 21 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் உ யர்த்தப்படவில்லை. இந்த நிலையில், அரசு, மீனவர்களுக்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி இருக்க வேண்டும்.
புதுச்சேரியில், மீனவ சமுதாய மக்களுடைய பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும் என, அ.தி.மு.க., கோரிக்கை வைத்தது.
இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி, மீனவ சமுதாய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என, அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், அந்த அறிவிப்பும் இன்று வரை செயல் வடிவம் பெறவில்லை.
இதுபோன்ற திட்ட அறிவிப்புகள் செயல் வடிவம் பெறாமலும், நலத்திட்ட உதவிகள் காலத்தோடு வழங்கப்படாமலும் இருப்பது மீனவர்களை அலட்சியப்படுத்தும் செயல்.
எனவே, புதுச்சேரி தேசிய ஜனநாய க கூட்டணி அரசானது, மீனவர்கள் நலனில் அக்கறை செலுத்தும் அரசாக இருக்க வேண்டும். மீனவர்களுக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்துவதற்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதியை ஒதுக்கிட வேண்டும் என்றார்.

