/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேனர் தடை சட்டத்தை கூட அமல்படுத்த முடியாத அரசு; அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
/
பேனர் தடை சட்டத்தை கூட அமல்படுத்த முடியாத அரசு; அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
பேனர் தடை சட்டத்தை கூட அமல்படுத்த முடியாத அரசு; அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
பேனர் தடை சட்டத்தை கூட அமல்படுத்த முடியாத அரசு; அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 21, 2025 05:17 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் பேனர் தடை சட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிர்வாகம் செயல்படுகிறது என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டினார்.
அவர், கூறியதாவது;
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில், பேசியபோது, லோக்சபா தேர்தலில் இ.கம்யூ.,க்கு 15 கோடி, மா.கம்யூ., 10 கோடி ரூபாய் தி.மு.க., தேர்தல் செலவாக வழங்கியதாக தேர்தல் வரவு செலவு கணக்கில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதனை பழனிசாமி மாற்றுகட்சியிடம் கையூட்டு பெறுவது தான் கம்யூ., கட்சிக்கு அழகா என, குறிப்பிட்டார்.
அதற்கு கம்யூ., கட்சியினர் தேர்தல் செலவு செய்ததாக குறிப்பிடுகின்றனர். தொகுதிக்கு ரூ.95 லட்சம் தான் செலவு செய்ய வேண்டும். அதற்கு மேல் செலவு செய்தால் அவர்கள் வெற்றி செல்லாததாகிவிடும். எனவே இவர்கள் வெற்றியை செல்லாது என, தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.
புதுச்சேரி அமைச்சரவையில் இருந்த 2 தலித் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை காங்., ஜாதி ரீதியில் பேசுகிறது. புதுச்சேரி அரசியலில் பரூக், வைத்திலிங்கம், ஜானகிராமன் ஆட்சியிலும், தலித் அமைச்சர்கள் இல்லை. இதை காங்., மறந்து விட்டது.
காவல்துறை உச்சகட்ட கோஷ்டி பூசலில் சிக்கித் தவித்து வருகிறது. உள்துறை அமைச்சர், முதல்வர் காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி பேச வேண்டும். புதுச்சேரியில் முழுமையாக பேனர் தடை சட்டத்தை கூட அமல்படுத்த முடியாத அரசு நிர்வாகம் உள்ளது' என்றார்.
பேட்டியின் போது இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, துணைச் செயலாளர் நாகமணி ஆகியோர் உடனிருந்தனர்.