தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அ.தி.மு.க., கிரிக்கெட் போட்டி: அன்பழகன் பரிசு  வழங்கல்

 அ.தி.மு.க., கிரிக்கெட் போட்டி: அன்பழகன் பரிசு  வழங்கல்

 அ.தி.மு.க., கிரிக்கெட் போட்டி: அன்பழகன் பரிசு  வழங்கல்


ADDED : ஜன 16, 2026 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 07:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் பரிசு வழங்கினார்

புதுச்சேரி அ.தி.மு.க., மருத்துவ அணி சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா, பொங்கல் திருநாளை முன்னிட்டு உப்பளம் லீக்-2026 கிரிக்கெட் போட்டி நடந்தது.

உப்பளம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் 30 அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் கபில்தேவ் சி.சி., அணியை வீழ்த்தி வேதா-12 அணி முதல் இடத்தை பிடித்தது. மூர்த்தி சி.சி., மூன்றாம் இடத்தை பிடித்தது.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு அ.தி.மு.க., மாநில மருத்துவர் அணி தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் பங்கேற்று பரிசு வழங்கினார்.

முதலிடம் வென்ற வேதா-12 அணிக்கு ரூ.25,000, இரண்டாம் இடம் வென்ற கபில்தேவ் சி.சி., அணிக்கு ரூ.15,000, மூன்றாம் இடம் வென்ற மூர்த்தி சி.சி., அணிக்கு ரூ.7,000 ரொக்கம் மற்றும் கோப்பை வழங்கினார்.

அவைத்தலைவர் அன்பானந்தம், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, ரோட்டரி சங்க தலைவர் ராம்குமார், கணேஷ் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us