/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விடுமுறையை முன்னதாக அறிவிக்க அ.தி.மு.க., துணை செயலாளர் கோரிக்கை
/
விடுமுறையை முன்னதாக அறிவிக்க அ.தி.மு.க., துணை செயலாளர் கோரிக்கை
விடுமுறையை முன்னதாக அறிவிக்க அ.தி.மு.க., துணை செயலாளர் கோரிக்கை
விடுமுறையை முன்னதாக அறிவிக்க அ.தி.மு.க., துணை செயலாளர் கோரிக்கை
ADDED : ஏப் 22, 2025 04:25 AM
புதுச்சேரி: வெய்யில் தாக்கம் அதிகரித்துள்ளதால், பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை முன்னதாக அறிவிக்க வேண்டுமென அ.தி.மு.க., அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் அறிக்கை:
புதுச்சேரியில் பகலில் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு, வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. பள்ளி மாணவர்கள், முதியோர் வெயிலின் தாக்கத்தால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாலையிலேயே சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் மாணவர்கள் பள்ளி செல்வதற்கே கடும் சிரமப்படுகின்றனர். வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆகையால், கோடை விடுமுறையை முன்னதாக அறிவித்து பள்ளி மாணவர்களை வெயிலின் தாக்கத்திலிருந்து காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.