ADDED : ஜன 16, 2025 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் தனது குடும்பத்துடன் பங்கேற்று கொண்டாடினர்.
முதலியார்பேட்டை தொகுதி அ.தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. மாநில ஜெ., பேரவை செயலாளர் பாஸ்கர், அவரது மனைவி கன்னிய செல்வி, மகள் ஸ்ரீமதி ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்தனர்.
இதில், தொகுதியை சார்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, பொங்கல் வைத்து கொண்டாடினர்.
பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் பரிசுகள் வழங்கினார்.முதலியார் பேட்டை தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

