/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா அ.தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து
/
மாஜி எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா அ.தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து
மாஜி எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா அ.தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து
மாஜி எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா அ.தி.மு.க., நிர்வாகிகள் வாழ்த்து
ADDED : ஏப் 25, 2025 04:53 AM

புதுச்சேரி: அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி மாநில அ.தி.மு.க. துணை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வையாபுரி மணிகண்டன் தனது பிறந்தநாள் விழாவினை, முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் வீதியில் உள்ள முருகன் மண்டபத்தில் அ.தி.மு.க., மாநில, தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் கொண்டாடினார்.
அவருக்கு அ.தி.மு.க., மாநில இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க., மாநில இணை செயலாளர் காசிநாதன், முன்னாள் தொகுதி செயலாளர் மணி, தொகுதி செயலாளர் பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர் செல்வம் மற்றும் செல்வம், ஜெயபால், அஜய்நாதன், கன்னியப்பன், பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.