தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கேரளாவுடன் மாகிக்கு தேர்தல் அ.தி.மு.க., வலியுறுத்தல்

 கேரளாவுடன் மாகிக்கு தேர்தல் அ.தி.மு.க., வலியுறுத்தல்

 கேரளாவுடன் மாகிக்கு தேர்தல் அ.தி.மு.க., வலியுறுத்தல்


ADDED : பிப் 26, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மாகி பிராந்தியத்திற்கு கேரள மாநிலத்துடன் தேர்தல் நடத்த வேண்டும் என, அ.தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் அ.தி.மு.க., சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் 90 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதனையொட்டி, மாநிலத்தில் மொத்தமுள்ள 1,099 ஓட்டுசாவடிகளின் எண்ணிக்கையை 1,000 ஆக குறைக்க புதுச்சேரி தேர்தல் துறை முடிவு செய்தது. பின்னர் ஏனோ, இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.

தமிழகத்தில் தேர்தல் நடக்கும் நாளில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமிலும், கேரளாவில் தேர்தல் நடக்கும் நாளில் மாகியிலும் தேர்தல் நடத்த வேண்டும். மேலும், எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் சூழலில், தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் வாக்காளர்களை கவர சாலை உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு 'பூமி பூஜை'களை நடத்தி வருவதற்கு தடை விதிக்க, புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்திட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us