/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அ.தி.மு.க., பிரமுகர் பிறந்த நாள் விழா
/
அ.தி.மு.க., பிரமுகர் பிறந்த நாள் விழா
ADDED : ஆக 04, 2025 01:33 AM

புதுச்சேரி : பிறந்த நாள் கொண்டாடிய அ.தி.மு.க., பிரமுகர் சுத்துக்கேணி பாஸ்கருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி அ.தி.மு.க., ஜெ., பேரவை முன்னாள் செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதை முன்னிட்டு, தனது இல்லத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அமைச்சர் நமச்சிவாயம், மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன், மாநில பா.ஜ., தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அ.தி.மு.க., அவைத் தலைவர் அன்பானந்தம், இணை செயலாளர் திருநாவுக்கரசு, துணை செயலாளர்கள் ராஜாராமன், குமுதன், நாகமணி, ஜெ., பேரவை செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம்,
தொழிலதிபர் விக்னேஷ் ஏஜென்சி கணேசன், வழக்கறிஞர் மலர்மன்னன், தொழிற்சங்க தலைவர் பாப்புசாமி, இணை செயலாளர் ராஜாராம், மகளிர் அணி செயலாளர் விமலா, ஐ.டி., அணி துணை செயலாளர்கள் கார்த்திக், ராமு உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
விழா ஏற்பாடுகளை தட்டாஞ்சாவடி தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் தமிழ்செல்வன், பாஸ்கரன், ராஜேந்திரன், பால்ராஜ், தயாளன், முனிசாமி செய்திருந்தனர்.