/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அ.தி.மு.க., மே தின பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கல்
/
அ.தி.மு.க., மே தின பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கல்
அ.தி.மு.க., மே தின பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கல்
அ.தி.மு.க., மே தின பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மே 02, 2025 04:50 AM

புதுச்சேரி: அ.தி.மு.க, சார்பில் நடந்த மே தின விழா பொதுக்கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
உப்பளம் தொகுதி சுப்பையா சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி தலைமை தாங்கினார்.
மாநில கழக துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில மீனவர் அணி செயலாளர் ஞானவேல், மாநில அமைப்பு செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சின்னையா, தலைமை கழக பேச்சாளர் கோபி, மாநில கழக செயலாளர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து மக்களுக்கு தையல் மிஷின், தட்டு வண்டி, புடவைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜாராமன், கோமளா, மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, நகர கழக செயலாளர் அன்பழகன் மாநில கழகப் பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் குணசேகரன், உமா, நாகமணி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.