/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 01, 2025 02:06 AM

புதுச்சேரி: மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால், மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க, மாநில செயலாளர் அன்பழகன் எச்சரித்துள்ளார்.
மின் கட்டண உயர்வை கண்டித்து, மின் துறை தலைமை அலுவலகம் எதிரே அ.தி.மு.க.,வினர் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மின் கண்டன உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்திம் கோஷ மிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், அன்பழகன் பேசுகையில், 'மாநிலத்தில் லாபத்தில் இயங்கும் மின் துறையை தனியார் மயமாக்க அரசு முழுமையாக ஒப்புதல் அளித்த பிறகும், அதை மூடி மறைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.
மின் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்துவது ஓட்டு போட்ட மக்களை வஞ்சிக்கும் செயல்.
அரசின் பரிந்துரையை ஏற்று மின் கட்டணம் உயர்வினை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, நான்கு அடுக்கில் இருந்த மின் கட்டணம், தற்போது ஐந்து அடுக்கு முறையாக மாற்றம் செய்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு ஆளாவர். உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வினை, மானியமாக அரசு வழங்கும் என துறை அமைச்சர் அறிவித்துள்ளது மக்களை வஞ்சிக்கும் செயல்.
சர்வாதிகாரத்தனமாக மக்கள் மீது மின் கட்டண உயர்வை திணிக்கும் அரசின் முடிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், மாநில அளவில் அ.தி.மு.க., தொடர் போராட்டம் நடத்தும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், மாநிலத் துணைத் தலைவர் ராஜாராமன், இணைச் செயலாளர் வீரம்மாள், நகர செயலாளர் அன்பழகன், துணைச் செயலாளர்கள் குணசேகரன், கணேசன், நாகமணி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், கண்காணிப்பு பொறியாளர் கனியமுதனை சந்தித்து மின் கட்டடண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மனு அளித்தனர்.

