/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அண்ணா பல்கலை மாணவி பலாத்காரம் சி.பி.ஐ., விசாரணை கோரி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ADDED : டிச 31, 2024 05:55 AM

புதுச்சேரி: அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்தும் அ.தி.மு.க., சார்பில் புதுச்சேரி பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது.
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் சட்டவிரோத சம்பவங்கள் தடையின்றி தி.மு.க.,வினரால் அரங்கேற்றப்பட்டு வருகிறது. மாணவி பலாத்கார வழக்கில், குற்றவாளிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. மேலும், குற்றவாளி பேசிய அந்த சார் யார் என்று இதுவரை தெரியவில்லை.
அதற்குள் சிட்டி கமிஷனர் குற்றவாளி ஒருவர் மட்டும் என அறிக்கை விடுகிறார். எனவே இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரித்தால் தான் உரிய நீதி கிடைக்கும் என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.
வட மாநிலங்களில் எங்காவது ஒரு பெண் பாதித்தால் ஆவேசமடையும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சென்னை அண்ணா பல்கலை மாணவி பலத்கார சம்பவத்தை கண்டிக்காதது ஏன்? இது போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், ராஜாராமன், கோமளா, மாநில இணைச் செயலாளர் வீரம்மாள்,பொருளாள் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர்கள் அன்பழகன், சித்தானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.